இடுகைகள்

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

படம்
 * கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா*  கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க உப தலைவர் திரு செல்வராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க செயற்குழு உறுப்பினர் திரு ராஜேந்திர பிரசாத், பள்ளியின் பொருளாளர் ரத்னராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் திரு தாழையப்பன்,   திரு.பால்ராஜ் திரு.மனோகர் திரு.செல்வம் ஆகியோர் விழாவிற்கு வருகை தந்து வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். பள்ளி முதல்வர் பிரபு அனைவரையும் வரவேற்றார். நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இப்பள்ளி 100% தேர்ச்சி பெற்றனர்.   இதில் முதலிடம் பிடித்த மாணவன் நவீன் குமார் மற்றும் மாணவி ராஜஸ்ரீ ஆகியோர் 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், மாணவி ராஜேஸ்வரி 486 மதிப்பெண்கள் பெற்று

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம் : கோட்டாட்சியர் தகவல்!

 *மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம் : கோட்டாட்சியர் தகவல்!* தூத்துக்குடியில் வருகிற 11ஆம் தேதி நடைபெறும் "கல்லூரி கனவு” என்ற சிறப்பு முகாமில் வருவாய்த்துறை மூலம் அத்தியாவசிய சான்றுகள் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  இது தாெடர்பாக தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் மி.பிரபு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "2023-2024-ஆம் கல்வியாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவ / மாணவியருக்கு உயர்படிப்புகள் மற்றும் வேலை / தொழில் வாய்ப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்களால் ஆலோசனை வழங்கும் பொருட்டு "கல்லூரி கனவு” என்ற சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.  அதன்படி தூத்துக்குடி கல்வி மாவட்டத்திற்கு 11.05.2024 அன்று தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோட்டில் அமைந்துள்ள காமராஜ் கல்லூரிக்கு எதிர்புறம் அமைந்துள்ள "மாணிக்கம் மஹால் திருமண மண்டபத்தில்" வைத்து முகாம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே முகாம் நடைபெறும் நாளில் உயர்கல்வி சேர்க்கையின் போது தேவைப்படக்கூடிய வருவாய்த்துற

நாகலாபுரம் பள்ளியில் இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி மற்றும் யோகா பயிற்சி

படம்
  நாகலாபுரம் பள்ளியில் இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி மற்றும் யோகா பயிற்சி தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலூகா, கோவில்பட்டி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் 7 நாட்கள் இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி மற்றும் யோகா பயிற்சி தனித்தனியா இரு வேளைகளில் நடந்தது. பயிற்சியாளர்களாக முதுகலை ஆங்கில முதுகலை ஆசிரியர் ஜான் ஸ்டேனி, அரசியல் அறிவியல் முதுகலை ஆசிரியர் குணசேகரன், மற்றும் இடைநிலை ஆசிரியர்கள்  கவிதா, ரமேஷ்,உடற்கல்வி ஆசிரியை நர்மதா ஆகியோர் கலந்து கொண்டு ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கான அடிப்படை பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை 7 நாட்கள் தொடர்ந்து அளித்தனர்.  பயிற்சி நிறைவு நாள் அன்று கலந்து கொண்ட 24 பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு பள்ளியின் செயலாளர் மற்றும் மேளாள் கல்லூரி பேராசிரியர் பால்பாண்டியன் தலைமை வகித்து மாணவர்களின் கற்றல் திறன்களை மதிப்பீடு செய்து பாராட்டி வாழ்த்து தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.  தொடர்ந்து பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை நிர்வாகத்தின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.  நிகழ்ச்சியில் நாக

மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உதவிடும் பல்வேறு துறைகளின் பட்டியல்.

 மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித்தலைவருக்குப் பல்வேறு துறையின் கீழ் உதவுவதற்காக குறிப்பிட்ட துறைகளின் நேர்முக உதவியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். நேர்முக உதவியாளர் (பொது) நேர்முக உதவியாளர் (நில அளவை) நேர்முக உதவியாளர் (பொது வினியோகம்) நோ்முக உதவியாளர் (விவசாயம்) நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) நேர்முக உதவியாளர் (சத்துணவு) நேர்முக உதவியாளர் (கணக்குகள்) நேர்முக உதவியாளர் (ஊராட்சிகள்) நேர்முக உதவியாளர் (நகராட்சிகள்) என்று சில அலுவலர்கள் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அவர்கள் துறைகள் சார்பாக உதவுகிறார்கள்மாவட்ட அலுவலர்கள்மாவட்ட ஆட்சித்தலைவருக்கு உதவ மேலும் பல துறைகளின் சார்பில் சில மாவட்ட அலுவலர்களை தமிழக அரசு நியமிக்கிறது. மாவட்ட வழங்கல் அலுவலர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மாவட்ட சமூகநல அலுவலர் மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வு நல அலுவலர் மாவட்டத் திட்ட அலுவலர் (மகளிர் மேம்பாட்டுத் திட்டம்) மாவட்டத் திட்ட அலுவலர் (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இணை இயக்குநர் (வேளாண்மை) இணை இயக்குநர்

ஜூல்ஸ் - தாம்சன் விளைவு- விரிவான செய்தி!

 வாயை அகலமாக திறந்து வைத்துக்கொள்ளவும். கையை வாயின் மிக அருகே வைத்துக்கொண்டு ஊதவும். வெப்பமான காற்று வருதா? குட் இப்ப வாயை குறுகலாக கிஸ் செய்வது மாதிரி வைத்துக்கொள்ளவும், ஊதவும். இப்ப குளிர்ந்த காற்று வருதா? அறிவியலில் இதன் பெயர் ஜூல்ஸ் - தாம்சன்  விளைவு (Joule Thomson effect). காற்றை குறுகலான பகுதியில் விட்டு, அது வெளியே வந்தால் அதன் வெப்பநிலை குளிர்ந்துவிடும். இது மனிதர்களுக்கு வேண்டுமானால் புதிய விசயமாக இருக்கலாம். ஆனால் கரையான் புற்றுகள் எல்லாமே ஜூல்ஸ் தாம்சன் விளைவை பயன்படுத்தி கட்டபடுபவையே. கரையான் புற்றில் பல லட்சக்கணக்கில் சிறு துளைகள் இருக்கும். வெளிக்காற்று அதனுள் புகுந்து கரையான் புற்றுக்குள் வருகையில் ஏசி போட்டது போல புற்றுக்குள் ஜில் என இருக்கும். ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் ஈஸ்ட்கேட் சென்டர் எனும் பெயரில் ஒரு பெரிய ஷாப்பிங் மால் கட்ட திட்டமிடபட்டது. அதன் உரிமையாளர் "ஏசி கட்டணத்தை கட்டிட வடிவமைப்பு மூலம்" குறைக்கவேண்டுகோள் விடுத்தார். சவாலை ஏற்றுக்கொண்டார் அதன் எஞ்சினியர் மைக் பியர்ஸ் (Mick Pierce) கரையான் புற்றின் மாடலில் கட்டிடம் குளிர்விக்கபட்டது. பெரிய ஃபேன்க

கோவில்பட்டி நாடார் மே.நி.பள்ளி +2தேர்ச்சி 97%

படம்
 கோவில்பட்டி நாடார்  மே.நி.பள்ளி +2தேர்ச்சி 97% கோவில்பட்டி நாடார்  மே.நி.பள்ளியில் + 2 தேர்வு எழுதிய மாணவர்கள்  311  தேர்ச்சி பெற்றவர்கள்  302  தேர்ச்சி சதவீதம் 97%                                கணிப்பொறி அறிவியல் பாடத்தில் 14 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வணிகவியல் பாடத்தில் 6 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதல் மதிப்பெண் 578-மாணவி சரமாரி. 2வது மதிப்பெண்: 577 - மாணவர் தினேஷ் மூன்றாமிடம் அபிநயா.... மதிப்பெண்கள் 575....வெற்றி பெற்ற மாணவர்களை நாடார் உறவின்முறைப் பொருளாளர் சுரேஷ்குமார், செயலாளர் ஜெயபாலன், பள்ளிச் செயலர் ஆர்.எஸ். ரமேஷ் நிர்வாகக்குழு உறுப்பினர் ஜோதி பாசு தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் உட்பட பலர் பாராட்டினார்கள் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% பேர் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தேர்ச்சி!

  தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 96.39 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 96.39 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் வழக்கம் போல மாணவிகளே அதிகளவில் தேர்ச்சிபெற்றுள்ளனர்.  பிளஸ் 2 பொதுத் தேர்வை தூத்துக்குடி மாவட்டத்தில் 8155 மாணவர்கள் எழுதினர். இதில் 7681 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 10423பேர் தேர்வெழுதியதில் 10,227பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 18,578பேர் தேர்வு எழுதினர் இதில் 17,908 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.39 ஆகும்.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 203 பள்ளிகளில் 74 சதவீதம் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மொத்தமுள்ள 56 அரசு பள்ளிகளில் 13 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. பிளஸ் 2 பொதுத் தேர்வு தேர்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் மாநிலத்தில் 7வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 97.36 சதவீதம் தேர்ச்சியுடன் 5ஆம் இடம்